மின் திட்டங்களுக்கான நிதியுதவி: இலங்கையிடம் வழங்கிய இந்தியா


மின் திட்டங்களுக்கான நிதியுதவி: இலங்கையிடம் வழங்கிய இந்தியா
x
தினத்தந்தி 30 Aug 2024 12:07 AM IST (Updated: 30 Aug 2024 5:53 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கொழும்பு, -

இலங்கையில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்கான மின் திட்டங்கள் இந்திய மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 3 தீவுகளின் மக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்காக 11 மில்லியன் டாலர் (சுமார் ரூ.92 கோடி) நிதியுதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் தொகுப்பை இலங்கையிடம் இந்தியா நேற்று வழங்கியது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சுலக்ஷனா ஜெயவர்த்தனே மற்றும் இலங்கை எரிசக்தி ஆணையத்தின் தலைவர் ஆகியோரிடம் 3 தீவுகளின் மின் திட்டங்களுக்கான நிதியுதவியின் முதல் தொகுப்பு ஒப்படைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story