வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி: 6.5 கோடி பெயர்கள் நீக்கம்


வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி: 6.5 கோடி பெயர்கள் நீக்கம்
x

9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது.

டெல்லி,

பீகாரை தொடர்ந்து 2ம் கட்டமாக 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது. அதன்படி, தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கார், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தபணி நடைபெற்றது. கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கிய இப்பணி சமீபத்தில் நிறைவடைந்தது.

இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு மாநிலமாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தது. இதில், தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

இந்நிலையில், 2ம் கட்டமாக 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்குமுன் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.

1 More update

Next Story