நேரடி வரி வருவாய் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளது
நேரடி வரி வருவாய் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
Published on

டெல்லி,

மத்திய அரசின் முக்கிய வருவாய் பிரிவாக நேரடி வரி வருவாய் வசூல் பிரிவு உள்ளது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நேரடி வரி வசூல் வசூல் 6.33 சதவீதம் அதிகரித்து ரூ. 11.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ரூ. 4.91 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் நிறுவன வரிகள் நடப்பு ஆண்டு ரூ. 5.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், தனிநபர்கள் உள்ளிட்ட பிற வரிகள் ரூ. 5.94 லட்சம் கோடியில் இருந்து 6.56 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com