திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி
x

இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு 16 மணிநேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி,

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பகவானை தரிசனம் செய்கின்றனர்.

இதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 76 ஆயிரத்து 289 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 27 ஆயிரத்து 586 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர் அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 84 லட்சம் கிடைத்தது.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 11 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் (டைம் ஸ்லாட்) குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு 16 மணிநேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story