திருமண ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு


திருமண ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு
x

திருமண ஊர்வலத்தை நோக்கி ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தின் கஜூரி கரவுட்டா கிராமத்தில் திருமண விழா ஒன்று நடந்தது. இதையொட்டி நடந்த மணமகன் அழைப்பு ஊர்வலத்தில் ராம்பூர் ஜூரியாவைச் சேர்ந்த ராஜன் யாதவ் (வயது 30) என்பவர் கலந்து கொண்டார். அப்போது திருமண ஊர்வலத்தை நோக்கி ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார்.

இதில் ராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story