திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆன்லைனில் தரிசன டோக்கன் - இன்று முன்பதிவு தொடக்கம்

இந்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வகையான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
ஜனவரி (2026) மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படும் பக்தர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான (ரூ.300 கட்டண டிக்கெட்) ஒதுக்கீடு 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.






