‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, நமது தைரியத்தின் அடையாளம் - ராஜ்நாத் சிங்


‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, நமது தைரியத்தின் அடையாளம் - ராஜ்நாத் சிங்
x

பயங்கரவாத மனநிலை உயிருடன் இருக்கும் வரை அமைதிக்கான நமது பணி தொடரும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்ற ராணுவத் தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், ராணுவ துணை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் மற்றும் அனைத்து ராணுவ தளபதிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ​​ராஜ்நாத் சிங் பேசியதாவது;-

“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கையாக மட்டுமல்லாமல், நாட்டின் தைரியம் மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாக வரலாற்றில் இடம்பிடிக்கும். பயங்கரவாதிகளுக்கு எதிராக நமது படைகள் எடுத்த நடவடிக்கையில் துல்லியம் மற்றும் கண்ணியம் ஆகிய இரண்டும் இருந்தன. இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. பயங்கரவாத மனநிலை உயிருடன் இருக்கும் வரை அமைதிக்கான நமது பணி தொடரும்.

எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைக்கும் இந்தியா தனது சொந்த விதிமுறைகளின்படி பதிலளிக்கும் என்ற சிந்தனையை ‘ஆபரேஷன் சிந்தூர்’ உருவாக்கியுள்ளது. இது புதிய இந்தியாவின் பாதுகாப்பு கோட்பாடு. இது உறுதியையும் தைரியத்தையும் உள்ளடக்கியது. நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க 24 மணி நேரமும் காவலில் நிற்கும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், எதிரிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். எப்போதும் விழிப்புடனும், தயாராகவும் இருங்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story