'புவியீர்ப்பு விசை குறித்து நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது' - ராஜஸ்தான் கவர்னர்

புவியீர்ப்பு விசை குறித்து நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பாக்டே தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாபு பாக்டே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நியூட்டன் புவியீர்ப்பு விசை குறித்து பிற்காலத்தில்தான் பேசினார். ஆனால், நமது வேதங்களில் ஏற்கனவே புவியீர்ப்பு விசை குறித்து கூறப்பட்டுள்ளது. தசம முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் பண்டைய அறிவை அழிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக 1190-களில் நலந்தா பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டது. எனவே, மாணவர்களின் அறிவுத்திறனை அதிகரிப்பது மட்டுமின்றி, அவர்களை இந்திய அறிவு மற்றும் அறிவியலுடன் இணைப்பது அவசியம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






