திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலி... கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய பஞ்சாயத்து தலைவர்

மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட கைகள் இருந்ததை பார்த்து விவசாயி அதிர்ச்சியடைந்தார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் திகம்கர் பகுதியை சேர்ந்தவர் ரச்னா தேவி. கணவனை இழந்த இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ரச்னா தேவிக்கு இருந்த ஒரு பிரச்சினையை தீர்க்க அருகில் உள்ள பக்கத்து கிரமமான கிஷோர்புராவில் வசித்து வரும் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சஞ்சை பட்டேலிடம் உதவி கேட்டார்.
அந்த பிரச்சினை தொடர்பாக அடிக்கடி அவரை ரச்னாதேவி சந்தித்து வந்தார். நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பலமுறை தனிமை யில் சந்தித்து இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ரச்னா தேவி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கிஷோர் பட்டேலிடம் வற்புறுத்தியுள்ளார். கிஷோர் பட்டேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறி நாட்களை கடத்தினார். ஆனால் தொடர்ந்து ரச்னா தேவி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த கிஷோர் பட்டேல், ரச்னா தேவியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினார்.
வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு ரச்னா தேவியை வரச்சென்னார். அங்கு காத்திருந்த தனது மருமகன் சந்தீப் பட்டேலுடன் சேர்ந்து ரச்னா தேவிவை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவரை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரச்னா தேவி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அவரது உடலை 7 துண்டுகளாக வெட்டி. உடல் பாகங்களை பிரித்து தனிதனி சாக்கு மூட்டையில் கட்டினர். ஒரு மூட்டையை கிணற்றிலும், மற்றொரு மூட்டையை பாலத்திற்கு அடியிலும் வீசி சென்றனர். இந்த நிலையில் நிலத்தை பார்க்க வந்த விவசாயி தனது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்து கிணற்றை பார்த்தபோது, ஒரு சாக்கு மூட்டை மிதப்பதை பார்த்து சந்தேகமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட கைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தோடிபதேபூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார்.
இதில் இறந்த பெண்ணின் தலை கிடைக்காததால் குழப்பமடைந்தனர். தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள லகேரி ஆற்றிலிருந்து அந்த பெண்ணின் தலையை போலீசார் கண்டெடுத்தனர். இறந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ள சுவரொட்டிகள் அடித்து - அருகில் உள்ள கிராமங்களில் வினியோகித்தனர்.
காணாமல் போன தன் அக்காவை தேடிக்கொண்டிருந்த ரச்னா தேவியின் சகோதரன், ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை பார்த்து போலீசாரை அணுகினார். அப்போதுதான் நடந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு, கொலை செய்த சஞ்சய் பட்டேல் மற்றும் அவரது மருமகன் சந்தீப் பட்டேலை கைது செய்தனர். கொலைக்கு உதவியாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






