பாரா ஒலிம்பிக்கில் குவியும் பதக்கங்கள்: இந்தியா பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி


பாரா ஒலிம்பிக்கில் குவியும் பதக்கங்கள்: இந்தியா பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 4 Sep 2024 11:59 AM GMT (Updated: 4 Sep 2024 12:03 PM GMT)

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது. இதுவரை இல்லாத அளவில் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 19 பதக்கங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பதக்கங்களை குவித்து வரும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நம்முடைய பாரா ஒலிம்பிக் குழு, இதுவரை இல்லாத அளவில் பாரா ஒலிம்பிக் தொடரில் நம் நாட்டிற்காக அதிக பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது. இது நமது விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் உறுதியை காட்டுகிறது. ஒவ்வொரு வீரருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story