ஓமன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது

எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனது பயணத்தின் நிறைவாக ஓமன் சென்றார்
மஸ்கட்,
ஜோர்டான்,எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக, ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு அவர் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனது பயணத்தின் நிறைவாக ஓமன் சென்றார். ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து தனது எக்ஸ் பதிவில்
இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது; ஓமன் நாட்டின் மஸ்கட்டில் தரையிறங்கினேன். இது இந்தியாவுடன் நீடித்த நட்பு மற்றும் ஆழமான வரலாற்று தொடர்புகளைக் கொண்ட நிலமாகும். இந்த வருகையானது இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும், கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை சேர்க்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.






