உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை சீர்படுத்துவதில் புதிய தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
டெல்லி,
இந்தியாவில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க ஸ்டார்ட் அப் இந்தியா என்ற பெயரில் புதிய திட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின்கீழ் புதிய தொழில்நிறுவனங்கள் தொடங்க பல்வேறு உதவிகள் மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இது தொடர்பாக தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை சீர்படுத்துவதில் புதிய தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. உலகின் 3வது ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா அடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. 2014ம் ஆண்டு இந்தியாவில் 500 ஸ்டாட்ர் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரித்துள்ளது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அரசு துணைநிற்கும். உங்கள் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்கள் தைரியம், மன உறுதி, புத்தாக்க முயற்சி இந்தியாவின் எதிர்காலத்தை சீரமைக்கிறது. உற்பத்தி, தொழில்நுட்பத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்திய தொழில்நுட்பம், புதிய தொழில்துறை அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் வல்லமை பெறுவதே நமது இலக்கு
என்றார்.






