ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து


ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
x

இந்தியா-ஜப்பான் சிறப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதித்தனர்

புதுடெல்லி,

ஜப்பான் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக சனே தகைச்சி கடந்த வாரம் பதவியேற்றார்.இந்நிலையில், அவரை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா-ஜப்பான் சிறப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதித்தனர். உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் வலிமையான இந்தியா-ஜப்பான் உறவு அவசியம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இருதரப்பு உறவை அதிகரிக்க நெருங்கி பணியாற்றுவது என இருவரும் முடிவு செய்தனர்.

1 More update

Next Story