பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - பட்ஜெட் குறித்து ஆலோசனை


பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - பட்ஜெட் குறித்து ஆலோசனை
x

புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

புதுடெல்லி,

2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உள்ளிட்ட சூழல்களுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து கருத்துகளைக் கேட்பதற்காக, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

1 More update

Next Story