சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

சர்தார் வல்லபாய் பட்டேலின் 75வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
டெல்லி,
இந்திய சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வல்லபாய் பட்டேல். இவர் நாட்டின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். இதனிடையே, குஜராத்தின் நடியாட் பகுதியில் 1875ம் ஆண்டு பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் 1950ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 75வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தில் அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 75வது நினைவு தினத்தில் அவரை போற்றுவோம். அவர் இந்தியாவை ஒன்றிணைக்க தனது வாழ்வை அர்ப்பணித்தார். ஒருங்கிணைந்த, வலிமையான இந்தியா உருவாக மாபெரும் பங்களித்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நாடு கடமைபட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.






