அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் பேச்சு


அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் பேச்சு
x

Image Courtesy : ANI

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் மதிப்பாய்வு செய்தனர்.

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த உரையாடலின்போது இரு தலைவர்களும் இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர். மேலும், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்டுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிபர் டிரம்புடன் நட்பான, சுவாரஸ்யமான உரையாடலை நடத்தினேன். இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களைப் பற்றி விவாதித்தோம். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story