ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

Image Courtesy : PTI
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரவுபதி முர்மு பாடுபட்டுள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கையும், தலைமைத்துவமும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. பொது சேவை, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை மற்றும் பலத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார். மக்கள் சேவையில் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






