ஜனாபதிபதி திரவுபதி முர்மு நாளை உத்தர பிரதேசம் பயணம்


ஜனாபதிபதி திரவுபதி முர்மு நாளை உத்தர பிரதேசம் பயணம்
x

ஜனாதிபதி மாளிகையில் திரவுபதி முர்முவை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை(26-ந்தேதி) உத்தர பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு காசியாபாத்தில் உள்ள இந்திராபுரத்தில், யசோதா மெடிசிட்டி மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க உள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் ஜனாதிபதி அலுவலகத்தின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story