புதுச்சேரி - புதிய நியமன எம்எல்ஏ-க்கள் நியமனம்


புதுச்சேரி - புதிய நியமன எம்எல்ஏ-க்கள் நியமனம்
x

அமைச்சராக இருந்த சாய் சரவண குமார் ராஜினாமா செய்த நிலையில், அமைச்சரவையில் எம்.எல்.ஏ. ஜான் குமாரை இணைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் புதுச்சேரி தலைவரான ரங்கசாமி முதல்-மந்திரியாக உள்ளார். பாஜகவைச் சேர்ந்த இருவருக்கு மந்திரி பதவி ஒதுக்கப்பட்டன. நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவியும் பாஜகவினர் 3 பேருக்கு வழங்கப்பட்டன.

இந் நிலையில் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் ராஜினாமா செய்ய பாஜக உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் ஜூலை 14ம் தேதி புதிய நியமன எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்க உள்ளனர் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story