பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்


பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
x
தினத்தந்தி 5 May 2025 3:48 PM IST (Updated: 5 May 2025 5:34 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின் போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக புதின், மோடியுடன் ஆலோசனை நடத்தினார். பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த புதின், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கூறிய புதின், இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மேலும் இந்தியா - ரஷியா உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியும் புதினும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ரஷியா- இந்தியா இடையேயான வருடந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு பங்களிக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த நிலையில், ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

1 More update

Next Story