பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டி: ராகுல் காந்தி இன்று வயநாடு செல்கிறார்


பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டி: ராகுல் காந்தி இன்று வயநாடு செல்கிறார்
x
தினத்தந்தி 22 Oct 2024 5:30 AM IST (Updated: 22 Oct 2024 5:36 AM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா காந்தி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார். இதையொட்டி ராகுல் காந்தி இன்று வயநாடு செல்ல உள்ளார்.

திருவனந்தபுரம்,

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் நாளை(புதன்கிழமை) வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இதையொட்டி கல்பெட்டாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் முன்பு வரை ரோடு ஷோ (வாகன அணிவகுப்பு) நடைபெறுகிறது. இதில் பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் 3 பேரும் இன்று (செவ்வாய்க்கிழமை) வயநாட்டுக்கு செல்கின்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், பிரியங்கா காந்தி 10 நாட்கள் வயநாட்டில் தங்கி இருந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

1 More update

Next Story