குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 26 Jan 2025 10:47 AM IST (Updated: 26 Jan 2025 12:11 PM IST)
t-max-icont-min-icon

76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

புதுடெல்லி ,

நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது . 76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். ஜனாதிபதி கொடியேற்றி வைத்ததும் வானில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. குடியரசு தின விழாவில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் நடைபெறுகிறது. குடியரசு தினவிழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

முன்னதாக குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தொவும் சாரட் வண்டியில் கடமைப்பாதைக்கு வந்தனர்.அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோவுக்கு முப்படை தளபதிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். குடியரசு தினத்தையொட்டி கடமைப்பாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது


1 More update

Next Story