தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 8 Sept 2025 2:31 PM IST (Updated: 8 Sept 2025 5:06 PM IST)
t-max-icont-min-icon

டி.ஜி.பி.யின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி யு.பி.எஸ்.சி.யிடம், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் அமர்வு கேட்டு கொண்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், தமிழக போலீஸ் துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பொறுப்பு டி.ஜி.பி.யாக ஒருவரை நியமிப்பதற்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் 2018-ம் ஆண்டு முடிவை சுட்டி காட்டி வழக்கறிஞர் ஹென்றி திபாக்னே சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் விநோத் சந்திரன் மற்றும் அதுல் சந்தூர்கார் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்காக எடுத்து கொள்ளும்படி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுபற்றிய விசாரணையில், பொறுப்பு டி.ஜி.பி.யாக ஒருவரை ஏன் வைத்து இருக்கிறீர்கள்? என நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அதன் குழுவில் ஒருவரின் பெயரை சேர்க்க கூறுவதற்கு முன், டி.ஜி.பி.யாக ஒருவரை நியமிக்க முடியாது என கூறி அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) விரைவாக பரிசீலனை செய்யும்படி நாங்கள் கேட்டு கொள்கிறோம். உங்களுடைய பரிந்துரையை பெற்ற பின்னரே, தொடர்புடைய மாநிலங்கள் டி.ஜி.பி.யாக ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என நீதிபதிகள் அமர்வு, தன்னுடைய உத்தரவில் தெரிவித்து உள்ளது. இதன்படி, டி.ஜி.பி.யின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி யு.பி.எஸ்.சி.யிடம் கேட்டு கொண்டுள்ளது.

1 More update

Next Story