ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே


ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே
x

பட்டேலும், இந்திரா காங்கியும் நாட்டிற்காக பெரும் பங்களிப்பை செய்துள்ளனர் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக இன்று கொண்டாடப்பட்டுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலும், இரும்பு பெண்மணி இந்திரா காங்கியும் நாட்டிற்காக பெரும் பங்களிப்பை செய்துள்ளனர். இதுவே இந்தியாவிற்காக காங்கிரஸ் கட்சி அளித்த பங்களிப்பின் வரலாறு.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், பட்டேலுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருந்தபோதும், இருவரும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டபோதும், அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக சிலர் சித்தரிக்க முயன்றனர். இந்தியாவின் ஒற்றுமையை வடிவமைத்ததற்காக பட்டேலை நேரு பாராட்டினார், மேலும் பட்டேல் நேருவை நாட்டிற்கு கிடைத்த ஒரு சிறந்த மனிதர் என்று அழைத்தார்.

நாட்டில் பெரும்பாலான சிக்கல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். காரணமாகவே நிகழ்கின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும். அதுவே என்னுடைய தனிப்பட்ட கருத்து.”

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

1 More update

Next Story