நொய்டாவில் கடும் குளிர்: 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு 15ம் தேதி வரை விடுமுறை


நொய்டாவில் கடும் குளிர்: 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு 15ம் தேதி வரை விடுமுறை
x

வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.

லக்னோ,

டெல்லி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் உள்படல் பல்வேறு வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடும் குளிருடன் பல மாநிலங்களில் பனி மூட்டமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கடும் குளிர் காரணமாக அப்பகுதியில் உள்ள 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு வரும் 15ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story