சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது டாக்டர்


சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது டாக்டர்
x

இளம்பெண் போலீசில் புகார் அளித்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முரிக்கம்புழா பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ராகவன் (வயது 75). இவர் அதே பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தார்.

இந்நிலையில், ராகவனின் கிளினிக்கிற்கு 23 வயது இளம்பெண் நேற்று சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது சிகிச்சை அளிப்பதாக கூறி இளம்பெண்ணுக்கு டாக்டர் ராகவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் தொல்லை கொடுத்த ராகவனை கைது செய்தனர்.

1 More update

Next Story