கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை: மருத்துவமனை மேலாளர் கைது


கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை: மருத்துவமனை மேலாளர் கைது
x

மருத்துவமனையில் இருந்து பாபு தாமஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் ஒரு பிரபல தேவாலயம் சார்பில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மனித வள மேம்பாட்டு மேலாளராக பணியாற்றியவர் பொன்குன்னத்தை சேர்ந்த பாபு தாமஸ் (வயது 45). அங்கு மருத்துவ உதவியாளராக கன்னியாஸ்திரி ஒருவர் பணிபுரிந்துள்ளார்.

அந்த கன்னியாஸ்திரி செல்போனுக்கு ஆபாச படம், வீடியோ மற்றும் ஆபாச செய்திகளை அனுப்பி பாபு தாமஸ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்னியாஸ்திரி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். உடனே மருத்துவமனையில் இருந்து பாபு தாமஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

மேலும் சங்கனாச்சேரி போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு தாமசை கைது செய்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது, கன்னியாஸ்திரி மட்டுமின்றி மேலும் பல பெண்களுக்கு அவர் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாபு தாமசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கன்னியாஸ்திரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மருத்துவமனை மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story