சிம்லா: கியாஸ் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி


சிம்லா: கியாஸ் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி
x

மற்ற தொழிலாளர்கள் வெளியே இருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள உக்லி கிராமத்தில் 7 தொழிலாளர்கள் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர்.

அவர்களில் ஒருவர் சமைத்துக்கொண்டிருந்தபோது சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி செத்தார். இந்த சம்பவத்தின்போது மற்ற தொழிலாளர்கள் வெளியே இருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

1 More update

Next Story