எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ளூர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்


எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ளூர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்
x

ராணுவ வீரர் கடமைக்கே முன்னுரிமை கொடுப்பார். எங்களுடைய குடும்பத்திற்கு முன்பாக, நாங்கள் நாட்டுக்கே முக்கியத்துவம் கொடுப்போம் என்றார்.

குப்வாரா,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்தார் கிராமத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவ வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அவர்களுடன் குழந்தைகளும் சேர்ந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, சிரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய அளவிலான உற்சாகத்துடனும், ஒற்றுமையுடனும் தீபாவளியை அவர்கள் கொண்டாடினர். தீபங்களை ஒளி பெற செய்தும், இனிப்புகளை பகிர்ந்தும், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தியும் ஒன்றாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஜம்மு மாவட்டத்திற்கு உட்பட்ட அக்னூர் நகரிலும் கொண்டாட்டம் களைகட்டியது. இதுபற்றி ராணுவ வீரர் ஒருவர் கூறும்போது, ராணுவ வீரர் கடமைக்கே முன்னுரிமை கொடுப்பார். எங்களுடைய குடும்பத்திற்கு முன்பாக, நாங்கள் நாட்டுக்கே முக்கியத்துவம் கொடுப்போம்.

எங்களுடைய குடும்ப உறவுகளுடன் நாங்கள் பேசினோம். எல்லையில் நாங்கள் தீபாவளியை கொண்டாடி வருகிறோம். ராணுவ சீருடையை அணிந்துள்ளதற்காக நான் பெருமையடைகிறேன். இது வெறும் சீருடையல்ல. இதில் நிறைய பொறுப்புகள் மற்றும் கடமைகள் உள்ளன என்றார்.

1 More update

Next Story