டெல்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை

டெல்லியில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 27-ம் தேதி தொடங்கும்.
புதுடெல்லி,
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 27 ஆம் தேதி தொடங்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்தாண்டு (2025) 3 நாள்களுக்கு முன்னதாக வரும் ஜூன் 24 ஆம் தேதியன்றே தொடங்கவுள்ளதாகத் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பல்வேறு பகுதியில் இடியுடன் கூடியகனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






