தைவானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு


தைவானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு
x
தினத்தந்தி 9 April 2025 10:21 AM IST (Updated: 9 April 2025 12:37 PM IST)
t-max-icont-min-icon

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

தைபே,

தைவான் நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரை நகரான இலன் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலன் நகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் 69 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சில விநாடிகள் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த நில நாட்களுக்குமுன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story