பொது இடங்களில் பாதசாரிகள் நடமாட்டத்துக்கு விதிகள் வகுக்க வேண்டும் - மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பொது இடங்களில் பாதசாரிகள் நடமாட்டத்துக்கு விதிகள் வகுக்க வேண்டும் - மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

6 மாதங்களில் விதிகள் வகுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கோவையை சேர்ந்த டாக்டர் ராஜசேகரன், சாலை விபத்துகளை குறைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்குமாறு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

“தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் மோட்டார் பொருத்தாத வாகனங்கள் நடமாட்டம், பாதசாரிகள் நடமாட்டம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் இன்னும் விதிகள் வகுக்காவிட்டால், 6 மாதங்களில் விதிகள் வகுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிடுகிறோம்.”

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

1 More update

Next Story