தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவை நம் நட்புறவின் வலிமையான தூண்கள்; வாங் உடனான சந்திப்பில் குறிப்பிட்ட பிரதமர் மோடி


தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவை நம் நட்புறவின் வலிமையான தூண்கள்; வாங் உடனான சந்திப்பில் குறிப்பிட்ட பிரதமர் மோடி
x

20-க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் தயாரிப்பு செயற்கைக்கோள்கள், இந்தியாவால் ஏவப்பட்டு உள்ளன என வாங் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். வாங் உடன் அவருடைய மனைவி மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்து பேசினார். இதன்பின்னர் இருவரும் இன்று கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன என்றார். இதில், சென்னையில், திறமைக்கான சிறந்த தேசிய மையம் ஒன்றை அமைப்பதும் அடங்கும்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, நம்முடைய நட்புறவுக்கு தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆகியவை வலிமையான தூண்களாக உள்ளன என்று குறிப்பிட்டார். விண்வெளி அறிவியல் துறையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், இந்த துறைக்கான ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என கூறினார்.

இதேபோன்று வாங் பேசும்போது, விண்வெளி போன்ற துறைகளில் நாம் ஒத்துழைப்பில் விரிவாக்கம் செய்வோம். இந்த நாள் வரை 20-க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் தயாரிப்பு செயற்கைக்கோள்கள், இந்தியாவால் ஏவப்பட்டு உள்ளன என பேசியுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்போது, சிங்கப்பூர் பிரதமர் வாங் ஆதரவு தெரிவித்ததற்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார். இந்த பேட்டியின்போது, இரு நாடுகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது.

1 More update

Next Story