மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் பயங்கரவாத தாக்குதல்... மதுபோதை ஆசாமியின் எச்சரிக்கையால் பரபரப்பு


மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் பயங்கரவாத தாக்குதல்... மதுபோதை ஆசாமியின் எச்சரிக்கையால் பரபரப்பு
x

நண்பருடன் இருந்தபோது, அவர் மதுபோதையில் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்துள்ளது.

புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட கூடும் என மர்ம நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

இதுபற்றி விசாரணை செய்ததில், அந்த நபர் ஆந்திர பிரதேசத்தில் இருந்து பேசியதும், யாரோ ஒருவர் அவருக்கு இந்த தகவலை கூறியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. அவருடைய பெயர் ஜஹாங்கீர் என்பதும், மதுபோதையில் நண்பருடன் இருந்தபோது, அவர் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியதும் தெரிய வந்துள்ளது.

இது வெறும் புரளி என விசாரணையின்போது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

1 More update

Next Story