காஷ்மீரில் பயங்கரவாதிகள் பற்றிய அச்சம் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது: கவர்னர் பேச்சு

காஷ்மீரில் ஹர் கர் திரங்கா இயக்கத்தின்போது, பேரணிகளில் பெரும் திரளாக இளைஞர்கள் பங்கேற்றனர் என கவர்னர் பேசினார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய வர்த்தக சேம்பர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சியில் சேம்பர் உறுப்பினர்களுடன் உரையாடினார். அப்போது அவர்களிடம் பேசும்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் பற்றிய அச்சம் மற்றும் அவர்களுடைய சூழல் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது என்றார்.
நடப்பு ஆண்டில் இதுவரை ஒரே ஒரு பயங்கரவாதியே ஆள்சேர்ப்பில் எடுக்கப்பட்டு உள்ளார் என பதிவாகி உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்ரீநகரை விட புல்வாமாவில் அதிக அளவில் தொழிற்சாலை பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.
புல்வாமா மாவட்டத்தில் ஹர் கர் திரங்கா இயக்கத்தின்போது, பேரணிகளில் பெரும் திரளாக இளைஞர்கள் பங்கேற்றனர். சோபியா மற்றும் புல்வாமா மாவட்டத்தில் போலீசாரோ அல்லது அரசு அதிகாரிகளோ போகாத கிராமங்கள் உள்ளன.
ஆனால், அந்த கிராமங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர் என கூறியுள்ளார்.






