திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்


திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
x

கோப்புப்படம்

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story