`தக் லைப்' - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் 'தக் லைப்'.
புதுடெல்லி,
`தக் லைப்' திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் 'தக் லைப்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, 'தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தினர்.
அதனை தொடர்ந்து, கமல்ஹாசன் மன்னிப்பு கோரினால் மட்டுமே கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை திரையிடுவோம் என்று கன்னட சினிமா வர்த்தக சபை கூறியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் 'தக் லைப்' படம் அங்கு வெளியாக தடை விதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, `தக் லைஃப்' திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தநிலையில், அதற்கு பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது






