திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்
x

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.

திருப்பதி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மனைவி, பிள்ளைகளுடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வழிபாட்டு நிறைவு செய்தபின் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் காரில் புறப்பட்டு சென்றார்.

1 More update

Next Story