இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
x
தினத்தந்தி 16 March 2025 9:24 AM IST (Updated: 16 March 2025 8:58 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 16 March 2025 7:12 PM IST

    ‘தமிழை பிடிக்காதவர்கள் ‘ரூ’ விவகாரத்தை பெரிய செய்தியாக்கிவிட்டனர்’ : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • 16 March 2025 2:01 PM IST

    கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். 

  • 16 March 2025 1:45 PM IST

    தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை.தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

  • 16 March 2025 1:43 PM IST

    திமுக செய்த ஊழலை வைத்து புத்தகமே எழுதலாம் என விஜய் கூறியது சரிதான் புத்தகம் மட்டும் அல்ல திரைப்படமே எடுக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

  • 16 March 2025 1:35 PM IST

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பாதுகாப்பு படையினர் பேருந்தில் சென்றபோது, சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் பேருந்து வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

  • 16 March 2025 1:13 PM IST

    நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) உடல்நலக்குறைவால் காலமானார். “திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்" போன்ற கவனிக்கத்தக்க நூல்களை இயற்றியவர் நாறும்பூநாதன்.

  • 16 March 2025 12:58 PM IST

    ஈகோவை விட்டுகொடுத்துவிட்டு அனைவரும் இணைய வேண்டும்.அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

  • 16 March 2025 12:27 PM IST

    உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி, தனக்கு உதவக்கோரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்திய நிலையில், அதற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story