இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025

Photo Credit: DD News
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Jun 2025 6:52 PM IST
பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல்
பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல் வரும் 23ம் தேதி தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
- 20 Jun 2025 4:54 PM IST
மெட்ரோ ரெயிலுக்குள் புகுந்த பாம்பு?
டெல்லி மெட்ரோ ரெயிலில் உள்ள பெண்கள் பெட்டிக்குள் பாம்பு புகுந்ததாக எண்ணி பயணிகள் அலறி உள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பாம்பு எதுவும் தென்படவில்லை, ஆய்வின் போது குட்டி பல்லி மட்டுமே தென்பட்டதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 20 Jun 2025 4:44 PM IST
'ஜன நாயகன்' படத்தின் அப்டேட்
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு சூசகமாக தெரிவித்துள்ளது.
- 20 Jun 2025 4:43 PM IST
லஞ்சம் வாங்கிய - பத்திரப்பதிவு துறை அதிகாரி
பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்-பதிவாளராக பணியாற்றும் ஸ்ரீகாந்த் என்பவர், அலுவலக கழிவறையில் வைத்து லஞ்சம் பெற்றபோது சிக்கினார். விரைந்து பத்திரத்தை பதிந்து கொடுப்பதாக பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
- 20 Jun 2025 4:38 PM IST
ஏர் இந்தியா விமானத்தில் - மோதிய பறவை
புனேவில் இருந்து டெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமானத்தில் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
- 20 Jun 2025 4:33 PM IST
தன் உயிரை துச்சமாக எண்ணி 5 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞர்
சீனா: தாய் தடுத்தபோதிலும் உயிரை துச்சமென எண்ணி, ஏரியில் தத்தளித்த 5 பேரின் உயிரை காப்பாற்றிய ஜாங் வெய் என்ற இளைஞருக்கு பாராட்டு குவிகிறது. 3 பேரை காப்பாற்றிய பின் வெய்யின் நிலை மோசமானதால் ஏரிக்குள் இறங்க வேண்டாம் என தாய் தடுக்க, “ஒருமுறை மன்னித்து விடுங்கள்" என மண்டியிட்டு மற்றவர்களை காப்பாற்றியுள்ளார். பின் மயங்கி கீழே விழ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார்.
- 20 Jun 2025 4:29 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பகுஜன் சமாஜ் பார்ட்டி மாநில பொதுச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
















