முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

image courtesy:twitter/@BCCI
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.
லீட்ஸ்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்ட தொடர் என்பதால் அந்த வகையிலும் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
Related Tags :
Next Story






