உத்தரபிரதேசத்தில் 12 மணி நேர வேலையை அனுமதிக்கும் புதிய சட்டம் அமல்

பெண் தொழிலாளர்களின் சுய ஒப்புதலுடன் அவர்கள் இரவு பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது.
உத்தரபிரதேசத்தில் 12 மணி நேர வேலையை அனுமதிக்கும் புதிய சட்டம் அமல்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் தொழிற்சாலைகள் திருத்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்ட விதிகள் குறித்து மாநில அரசு விளக்கம் அளித்தது. அதில், கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* புதிய விதிகளின் கீழ், தொழிற்சாலைகளில் அதிகபட்ச தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் மொத்த வாராந்திர வேலை 48 மணி நேரத்தை தாண்டக்கூடாது.

* தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வ ஒப்புதலுக்கு உட்பட்டு, இடைவெளி இல்லாமல் 6 மணி நேரம் வரை தொடர்ந்து வேலை செய்ய இந்த சட்ட விதி அனுமதிக்கிறது.

* பெண் தொழிலாளர்களின் சுய ஒப்புதலுடன் அவர்கள் இரவு பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது.

* பரிந்துரைக்கப்பட்ட தினசரி வரம்பை தாண்டி கடமைகளை செய்யும் தொழிலாளர்கள் இரு மடங்கு கூடுதல் நேர ஊதியத்தை பெற உரிமை பெறுவார்கள்.

இந்த திருத்தம் உத்தரபிரதேசத்தை தொழில்துறை வளர்ச்சியில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவதற்கான மாநிலத்தின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் என்றும் முதன்மை செயலாளர் (தொழிலாளர்) அதுல் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com