இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் - அதிர்ச்சி சம்பவம்


இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 9 Sept 2024 12:23 AM IST (Updated: 9 Sept 2024 6:24 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டம் உசைஹட் பகுதியை சேர்ந்த பாபி குப்தா. இவர் கடந்த 2ம் தேதி அதேபகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்தி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அப்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த இளம்பெண் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை பாபி குப்தா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து தப்பித்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு நடந்த கொடூரம் குறித்து கடந்த 7ம் தேதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாபி குப்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story