தென்னை மரம் முறிந்து விழுந்து 2 பெண்கள் பலி - அதிர்ச்சி சம்பவம்


தென்னை மரம் முறிந்து விழுந்து 2 பெண்கள் பலி - அதிர்ச்சி சம்பவம்
x

2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குனத்துக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் வசந்தா (வயது 65), சந்திரிகா (வயது 64). இவரும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை) வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும் சக பணியாளர்களுடன் இன்று வழக்கம்போல் குனத்துக்கல் கிராமத்தில் வேலை செய்துவிட்டு மதிய உணவு முடித்தப்பின் வேலை நடைபெறும் பகுதிக்கு அருகே உள்ள தென்னை தோட்டத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.

தென்னை மரத்தின் அருகே நிழலில் படுத்து அனைவரும் உறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரம் முறிந்து உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் வசந்தா, சந்திரிகா உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வசந்தா, சந்திரிகா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story