உத்தர பிரதேசம்: வீட்டில் அனுமதி இன்றி கூட்டுத் தொழுகை - 12 பேர் கைது


உத்தர பிரதேசம்: வீட்டில் அனுமதி இன்றி கூட்டுத் தொழுகை - 12 பேர் கைது
x

கோப்புப்படம்

அனுமதியின்றி புதிய மத நடவடிக்கையோ, கூட்டமோ நடத்துவது சட்ட விரோதம் என எஸ்.பி. அனிஷ்கா வர்மா தெரிவித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள முகமதுகஞ்ச் கிராமத்தில், ஹனீப் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று நீண்ட நாட்களாக காலியாக இருந்து வந்துள்ளது. அந்த வீட்டில் இஸ்லாமியர்கள் சிலர் சேர்ந்து வெள்ளிக்கிழமைகளில் கூட்டு தொழுகை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், வீட்டை மத வழிபாடு நடத்தக் கூடிய இடமாக மாற்றுவதற்கு தேவையான அனுமதி எதையும் பெறவில்லை என்று கூறி 12 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து பேசிய எஸ்.பி. அனிஷ்கா வர்மா, “அனுமதியின்றி எந்தவொரு புதிய மத நடவடிக்கையோ அல்லது கூட்டமோ நடத்துவது சட்ட விரோதமாகும். இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story