உத்தர பிரதேசத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்த கோவில்களை புனரமைக்கும் திட்டம் - மாநில அரசு அறிவிப்பு


உத்தர பிரதேசத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்த கோவில்களை புனரமைக்கும் திட்டம் - மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2025 9:16 PM IST (Updated: 6 July 2025 9:33 PM IST)
t-max-icont-min-icon

புனித தளங்களை பாரம்பரிய சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்கான விரிவான திட்டத்தை சுற்றுலாத் துறை தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களை புணரமைக்கும் திட்டத்தை மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. இதன்படி பிருகு மற்றும் துர்வாச முனிவர்களின் ஆசிரமங்கள், சமண கோவில்கள் ஆகியவற்றை புனரமைக்கும் திட்டங்களை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட புனித தளங்களை பாரம்பரிய சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்கான விரிவான திட்டத்தை சுற்றுலாத் துறை தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பல்லியாவில் உள்ள பிருகு ஆசிரமத்தில் அமைந்திருக்கும் சித்ரகுப்தர் கோவிலை அழகுபடுத்துதல், டெண்டுவா பட்டி பர்சதர் பகுதியில் உள்ள அனுமன் கோவில் வளாகத்தின் மேம்பாடு மற்றும் பசந்த்பூர் கிராமத்தில் உள்ள உதாசின் மடத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தகக்து.

1 More update

Next Story