உத்தர பிரதேசம்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளை கசியவிட்ட அதிகாரி - போலீஸ் விசாரணை

வினாத்தாளை கசியவிட்ட அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் கணித பாடத்தேர்வு நடந்தது. இதில் இடா மாவட்டத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றின் நிர்வாகியாக அஞ்சு யாதவ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இவர் நேற்று முன்தினம் காலை 9.37 மணிக்கு அந்த வினாத்தாளை அதிகாரிகள் இடம்பெற்றிருந்த வாட்ஸ்அப் குழு ஒன்றில் கசியவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் வினாத்தாளை கசியவிட்ட அஞ்சு யாதவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






