உத்தரகாண்ட்: பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு


உத்தரகாண்ட்: பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
x

Image Courtesy : ANI

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் உள்ள காஞ்சி தாம் ஆன்மிக தளத்திற்கு 7 பக்தர்கள் காரில் சென்றனர். அந்த கார் பொவாலி பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 50 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story