உத்தரகாண்ட்: பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்; வைரலான அதிர்ச்சி வீடியோ


உத்தரகாண்ட்: பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்; வைரலான அதிர்ச்சி வீடியோ
x

உத்தரகாண்டில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரின் நான்குபுறமும் கதவுகள் பூட்டிய நிலையில் இருந்தன.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், வீடுகள், கட்டிடங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

உத்தரகாண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்து, உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்பு படைகளின் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. காரின் நான்குபுறமும் கதவுகள் பூட்டிய நிலையில் இருந்தன. பந்து போன்று அந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த காரின் உள்ளே பயணிகள் இருந்தனர் என கூறப்படுகிறது. அவர்களின் நிலைமை என்னவானது என்ற விவரம் தெரிய வரவில்லை.

1 More update

Next Story