ராஜஸ்தானில் வேன் - லாரி மோதி விபத்து: 7 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியான சோகம்

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கதுஷ்யாம்ஜி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வேன் வீடு திரும்பி கொண்டிருந்த போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் விபத்து நடைபெற்றுள்ளதால், தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story






